சென்னை சைதாப்பேட்டை செட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (55). இவர் கிண்டியில் உள்ள தோல் கம்பெனியில் உதவியாளராக வேலை பார்த்துவருகின்றார். இந்நிலையில் இன்று காலை ஆண்ட்ரூஸ் வழக்கம்போல் தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் ஆலந்தூர் சாலை ஆப்ரகாம் பிரிட்ஜ் அருகே வரும்போது தண்ணீர் லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.