தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவும், மே.23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 10ஆம் தேதி அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 10ஆம் தேதியில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், இதனால் அனுமதி பெறாமல் பணம், தங்கம் மற்றும் பொருட்கள் எடுத்துச் சென்றால் சட்டப்படி குற்றம் என்றும், அவைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மார்ச் 19ஆம் தேதி வேட்புமனுவும், மார்ச் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், வேட்புமனு பரீசிலனை 27ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற 29ஆம் தேதியும் நடைபெற்றது.
வேட்புமனுக்கள் விவரம்
மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் மொத்தம் 845 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் 65 பெண் வேட்பாளர்களும், 559 சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு மாற்று பாலினத்தை சேர்ந்தவரும் அடங்குவர்.
சோதனையில் மீட்கப்பட்ட பணம்
மக்களவைக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 950 கோடிமதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் ரத்தான தொகுதி