தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லோக் அயுக்தா உறுப்பினர் நியமனம் சரியானது - உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்

By

Published : Apr 12, 2019, 12:00 AM IST

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதில் நீதித்துறை சாரா உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் நியமிக்கப்பட்டதற்கு தடை கோரியும், அவரது நியமனத்தை ரத்து செய்து, தகுதியானவரை நியமிக்க கோரியும் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மான் சேட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பதவி வகித்த எவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணி நியமனம் வழங்க கூடாது என இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது என சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த இவரை, லோக் ஆயுக்தா உறுப்பினராக நியமிப்பது அரசியலமைப்பு சட்ட விதிமீறல் என வாதிட்டார்.

ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் பிற மாநில உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி, லோக் ஆயுக்தா பணி அரசின் கீழான பணியல்ல என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். அரசு தலைமை வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details