நடப்பு ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இரண்டாவது சனிக்கிழமை தேசிய லோக் அதாலத் நடத்த வேண்டுமென தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் லோக் அதாலத் நடத்தப்பட்ட நிலையில், கரோனா தொற்று காரணமாக அதன் பின் லோக் அதாலத் நடத்தப்படவில்லை.
தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து, 9 மாத இடைவெளிக்குப் பின் தமிழ்நாட்டில் இன்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை தவிர, அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் மூலமாக நடத்தப்பட்ட இந்த லோக் அதாலத்தில், 354 அமர்வுகளில் 82 ஆயிரத்து 77 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.