தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு! - chennai district news

சென்னை: பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

By

Published : Sep 1, 2020, 9:38 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. கரோனா பரவுவதை தடுக்க தொற்று நோய் தடுப்புச் சட்டம், ஒழுங்கு முறை சட்டத்தின் அடிப்படையில் பொது இடங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என சென்னையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, வரும் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவநீட்டித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைப் போல, சென்னையில் 41-சென்னை நகர போலீஸ் சட்டம்-1888 -ன் கீழ் 15 நாள்களுக்கு ஊர்வலங்கள், பொதுக்கூட்டம் , உண்ணாவிரதம், பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி உள்ளிட்ட அனைத்தும் காவல் அனுமதியின்றி நடத்தக்கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

முக்கியமான பிரச்னைக்குரிய காலங்களில் காவல் ஆணையர் ஒவ்வொரு 15 நாள்களுக்கு ஒருமுறை உத்தரவு பிறப்பிப்பார். இந்நிலையில் வருகிற 11ஆம்தேதி வரை போராட்டம், ஆர்ப்பாட்டம், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து சென்னை நகர காவல் சட்டம் 41-ன் கீழ் சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள் - ஆட்சியர் அருண் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details