தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்திற்காக நான்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையொட்டியுள்ள 4 மாவட்டங்கள் மற்றும் 23 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு, பாதிப்பு அதிகமுள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
மாவட்டங்களுக்குள் 50 சதவீத பயணிகளுடன் பொதுப் போக்குவரத்து இயங்க அனுமதி.