தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப் பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி! - chennai high court

சென்னை: சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்திருந்த மனு குறித்து விசாரணையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Madras HC
Madras HC

By

Published : Dec 30, 2019, 1:27 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், ”1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தனித்தனியாக நடத்தப்படுவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஊராட்சிமன்றத் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், ஒன்றியப் பஞ்சாயத்து உறுப்பினர், மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதி உள்ளதால், வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தாலும், வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் நடப்பதையும் அம்மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - கழுகு பார்வை

ABOUT THE AUTHOR

...view details