கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 189ஆவது அவதார நாளான மார்ச் 3ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்திற்குப் பதிலாக வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் வழியைப் பின்பற்றும் மக்கள் ஏராளமானோர் அய்யா வழி என்று தனி சமயமாக அவரை வழிபட்டுவருகின்றனர். அய்யா வைகுண்டர் அவதரித்த நாளான மாசி மாதம் 20ஆம் தேதி அவரின் அவதார தினவிழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்தாண்டு அய்யா வைகுண்டரின் 189ஆவது அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து சாமித்தோப்பு நோக்கி பாத யாத்திரை செல்லும் நிகழ்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மார்ச் 4ஆம் தேதி அதிகாலை தொடங்கும் இந்நிகழ்வில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரளா எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கோடலி முடிச்சு கொண்டையுடன் ஏகாந்த சேவை சாதித்த காஞ்சி வரதர்!