2016ஆம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு - மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:தேர்தல் ஆணையத்திற்கு உதவ தயார் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி