மானியக் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர், "உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை. குடிநீர் பிரச்னையின் காரணமாகவே தற்போது உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்தவில்லை" என்று தெரிவித்தார்.
'குடிநீர் பிரச்னைக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தமில்லை..!' - எஸ்பி வேலுமணி - water issues
சென்னை: "குடிநீர் பிரச்னைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, "உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் தயாராகதான் இருக்கிறோம். வார்டு மறுவரையரை எல்லாம் முடிந்துவிட்டது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தீர்ப்பு வந்தபின்பு கண்டிப்பாக நடத்துவோம். குடிநீர் பிரச்னைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மழையின்மைக்கு பருவமழை பொய்துப் போனதும், மரம் வளர்ப்பு குறைந்துவிட்டதுமே காரணம். இதையும் அரசு சரிசெய்து கொண்டு இருக்கிறது. மழைநீர் திட்டத்தையும் அரசு செயல்படுத்த உள்ளது" என்றார்.