உள்ளாட்சித் தேர்தலில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கு பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நகராட்சித் தலைவர் பதவி இடங்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு முறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதில், பழங்குடி இன பெண்களுக்கு கூடலூர் நகராட்சி ஒதுக்கீடு, பட்டியல் இன பெண்களுக்கு ராணிப்பேட்டை, சீர்காழி, பெரம்பலூர் உள்ளிட்ட ஒன்பது நகராட்சித் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கான (பொது) அரக்கோணம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட எட்டு நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஒதுக்கீடு செய்தும் மீதமுள்ள 51 இடங்கள் பெண்கள் (பொது) பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: 'உள்ளாட்சித் தேர்தக்கு தடை கோரிய திமுக படுதோல்வியடைந்துள்ளது' - திண்டுக்கல் சீனிவாசன்