தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை 1 மணி முன்னிலை நிலவரம் - வாக்கு எண்ணிக்கை

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

1
1

By

Published : Oct 12, 2021, 2:21 PM IST

Updated : Oct 12, 2021, 7:51 PM IST

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சித் தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13333281_1.JPG

நண்பகல் 1 மணி நிலவரம்

140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் பதிவான வாக்குகளில் திமுக கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக ஐந்து இடங்களில் முன்னிலையில் உள்ளது. திமுகவைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

அதேபோல் 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் பதிவான வாக்குகளில் திமுக கூட்டணி 89 இடங்களிலும், அதிமுக 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட 17 திமுக வேட்பாளர்கள், இரண்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை

இதையும் படிங்க: விஜயதசமியன்று கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா? - அரசு கருத்து தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Oct 12, 2021, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details