தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ' யார் ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ அவர்கள் செய்கிற குற்றங்களைத் தான் பொது மக்கள் சிந்தித்துப் பார்ப்பார்கள். ஆளும் கட்சியாக இல்லாதவர்கள் மீது குற்றம் சுமத்துவது என்பது முறையும் அல்ல. அதிமுக மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, கேள்விக்கு திருப்பி பதில் கேள்வி கேட்கக்கூடாது.' என்று கூறினார்.
'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்துமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து விவாதிக்கப்படும்' என்றார்.