தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில்...! - ஊரக உள்ளாட்சித் தேர்தல்

சென்னை: வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

election commission
election commission

By

Published : Feb 24, 2020, 9:38 PM IST

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடைபெறாத மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களில் வார்டுகள் வரைமுறை செய்யும் பணிகள் நடைபெற்றுவந்தன.

தேர்தல் நடைபெறாத ஒன்பது மாவட்டங்களில் காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்பட நான்கு மாவட்டங்களில் வார்டுகள் வரைமுறை செய்யும் பணிகள் முடிவடைந்ததாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மீதமுள்ள ஐந்து மாவட்டங்களில் வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் பணிகள் தொடர்பாக இன்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில், ஒன்பது மாவட்ட முதன்மைப் பயிற்சியாளர்களுக்கு வார்டுகள் மறுவரையறை தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பார்க்க: இந்தியாவுடன் 300 கோடி டாலர் ராணுவ ஒப்பந்தம் - ட்ரம்ப் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details