தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு இன்னும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கு செப்டம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
இச்சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றனர்.