சென்னை:எம்.எஸ்.எம்.இ ஊக்குவிப்பு கவுன்சில் துணை தலைவர் முத்துராமன் டெல்லியில் பதவியேற்ற பின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த 2 திட்டங்கள் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தருவோம்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடித்தட்டு மக்களுக்கு தொழில் தொடங்க வங்கிகள் முலம் கடன் உதவி வழங்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் முலமாக கடனுதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.