தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவக சாம்பாரில் பல்லி, வாடிக்கையாளர் அதிர்ச்சி - chrompet

குரோம்பேட்டையிலுள்ள உள்ள உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டு வாடிக்கையாளர் உணவகத்தின் மீது புகார் அளித்துள்ளார்.

சாம்பாரில் பல்லி வாடிக்கையாளர் அதிர்ச்சி
சாம்பாரில் பல்லி வாடிக்கையாளர் அதிர்ச்சி

By

Published : Aug 10, 2021, 10:07 PM IST

சென்னை:குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையில் நான்கு ஆண்டுகளாக காரைக்குடி செட்டிநாடி மெஸ் செயல்பட்டு வருகிறது. இன்று (ஆக.10) மதியம் 2 மணியளவில் இசக்கி (34) என்பவர் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் சாப்பிடச் சென்றார். அப்போது இசக்கிக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உணவகத்தில் முறையிட்டதும், உணவகத்தினர் மீதமிருந்த சாப்பாட்டை கீழே கொட்டி விட்டனர். தகவலறிந்து வந்த பல்லாவரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள் மெஸ்ஸில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இசக்கி அளித்த புகாரின் அடிப்படையில் மெஸ்ஸின் மேலாளர் தர்மதுரையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனையில் கொடைக்கானல் நகரம்... என்ன நடக்கிறது?

ABOUT THE AUTHOR

...view details