தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை பேராசிரியருக்கு வெற்றிகரமாக நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை! - liver transplantation

சென்னை: குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை பேராசிரியருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

By

Published : Nov 10, 2020, 6:58 PM IST

இலங்கை அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சகத்தின் பேராசிரியராக இருப்பவர் பரசங்க நமல் கருணாரத்ன (44). இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரியவகை கல்லீரல் பிரச்சனை இருந்துள்ளது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அவர் தனக்கு கல்லீரல் தானம் அளிக்கும் தனது மனைவி, மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோருடன் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி விமான சேவைகள் இல்லாத நேரத்தில் சரக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அவருடைய மனைவி சுமலி பிரசங்காவிற்கு பொதுவான பரிசோதனை செய்யப்பட்டதில், சிறு குடலில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதால் அவரிடம் இருந்து கல்லீரல் தானம் பெறமுடியவில்லை.

இதில் அவருடைய மைத்துனர் தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.10) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவரது மனைவிக்கு வயிற்றில் இருந்த சிறு கட்டினையும் மருத்துவர்கள் நீக்கினர்.

இதனையடுத்து மீண்டும் அனைவரும் நலமுடன் இலங்கை திரும்ப உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மொஹமத் ரெலா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கரோனா காலத்தில் மக்கள் பயந்து கொண்டு வீட்டிலேயே இருப்பதால் புற்றுநோய் உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் இவர் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு இருந்த நேரத்திலும், இலங்கையில் இருந்து கார்கோ விமானத்தில் வந்து சிகிச்சை பெற்று நலம் அடைந்திருப்பது பாராட்டுக்குரியது.

கரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் மக்கள் மற்ற நோய்களுக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இவர் சிகிச்சைக்கு வந்ததால் அவர் மனைவிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.

இது இவர்களுக்கு கிடைத்த வரம்” என்று தெரிவித்தார். மேலும் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களுக்கு பிரசங்க நமல் மற்றும் அவரது குடும்பத்தாரும் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த தாமதமாகும் - தமிழ்நாடு உயர் கல்வித்துறை

ABOUT THE AUTHOR

...view details