விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள், வானிலை குறித்து தகவல்களை உடனுக்குடன் பரிமாறும் வகையில் வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும் - அமைச்சர்
TN Agri Budget 2023: வேளாண் நிதிநிலை அறிக்கை முக்கிய தகவல்கள்! - மு க ஸ்டாலின்
11:47 March 21
விவசாயிகளுக்கு வாட்ஸ்அப் குழு!
11:38 March 21
பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா!
அரசு பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பண்ணைச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் - அமைச்சர்
11:38 March 21
500 இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சி!
ரூ.1 கோடி செலவில் 500 இளைஞர்களுக்கு வேளாண் கருவிகளை இயக்க பயிற்சி வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
11:38 March 21
ஓசூர் பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு!
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி தென்னை, ஓசூர் பன்னீர் ரோஜா ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்
11:30 March 21
4 மாவட்டங்களில் மிளகாய் மண்டலம்
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
11:30 March 21
ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம்!
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும்
11:30 March 21
விவசாயிகளுக்கு வெளிநாடு சுற்றுலா!
வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டம்; இத்திட்டத்திற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
11:26 March 21
குளிர்கால காய்கறிகளுக்கு மானியம்!
ஆண்டு முழுவதும் தக்காளி கிடைக்க ரூ.19 கோடியும், வெங்காயம் கிடைக்க ரூ.29 கோடியும் ஒதுக்கீடு; இதேபோல் சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் - அமைச்சர்
11:23 March 21
நுண்ணீர் பாசனம் நிறுவ ரூ.450 கோடி
தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
11:16 March 21
தேனி, திண்டுக்கலில் முருங்கை இயக்கம்
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் ஆயிரம் எக்டரில் சாகுபடியினை உயர்த்திட 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு
10:49 March 21
சிறுதானிய திருவிழாக்கள்!
ரூ.82 கோடி மதிப்பீட்டில் சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:44 March 21
நம்மாழ்வார் விருது!
சிறப்பாக செயல்படும் அங்கக(Organic) விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் அமைச்சர்
10:43 March 21
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்!
ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
10:43 March 21
மின்னணு வேளாண்மை திட்டம்!
37 மாவட்டங்கள் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பெறும் வேளாண் இடுபொருள்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை
10:36 March 21
ரூ.15 கோடிக்கு வேளாண் கருவிகள்!
60,000 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் - அமைச்சர் பன்னீர்செல்வம்
10:36 March 21
கிராம முன்னேற்ற குழு அமைப்பு!
பருவத்திற்கேற்ப பயிர், தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம முன்னேற்ற குழு அமைக்கப்படும் - அமைச்சர்
10:32 March 21
ரூ.26 கோடியில் இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு!
விவசாயத்தில் ரசாயனம், உர பயன்பாட்டை குறைத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:30 March 21
ரேஷன் கடைகளில் 2 கிலோ கேழ்வரகு
தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க திட்டம் - அமைச்சர்
10:28 March 21
20 மாவட்டங்கள் - 2 சிறுதானிய மண்டலங்கள்!
நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறு தானிய மண்டலங்களில் இணைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:26 March 21
ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு!
கேழ்வரகு, கம்பு ஆகிய சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:25 March 21
கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மரக்கன்றுகள்!
2504 கிராம பஞ்சாயத்துகளில், 300 வீடுகளுக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் 15 லட்சம் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படும் - அமைச்சர் பன்னீர்செல்வம்
10:24 March 21
ரூ.123.63 கோடிக்கு வேளாண் இடுபொருள்
பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.123.63 கோடியில் இடுபொருள் நிவராணமாக வழங்கப்பட்டு உள்ளது - அமைச்சர் பன்னீர்செல்வம்
10:21 March 21
வேளாண் பட்டதாரிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மானியம்
2021 - 2022-ஆம் நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:21 March 21
127 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு!
வரும் நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:16 March 21
30 ஆயிரம் சதுர பரப்பளவில் மரக்கன்றுகள்!
சந்தனம், தேக்கு, உள்ளிட்ட 77 லட்சம் மரக்கன்றுகள் 30,000 சதுர பரப்பளவில் நடப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10:13 March 21
2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்பு
2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
10:12 March 21
புன்செய் நிலங்களுக்கும் பயிர் அறிமுகம்!
புன்செய் நிலங்களுக்கும் உரிய பயிர்களை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உள்ளது - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
10:10 March 21
63.43 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு
தமிழ்நாட்டில் தற்போது 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு உள்ளது - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
10:04 March 21
வேளாண் பட்ஜெட் தாக்கல்
பச்சைத் துண்டுடன் ஒரு விவசாயி போல பேரவைக்கு வந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
10:01 March 21
வேளாண் பட்ஜெட் அமர்வு தொடங்கியது
வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய பச்சை துண்டுடன் சட்டப்பேரவைக்கு வருகைத் தந்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
09:43 March 21
2022 - 23 நிதியாண்டில் ரூ.15,600 கோடி
2022 - 2023 வேளாண் நிதிநிலை அறிக்கையில் 15,600 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் 2023 - 2024 நிதியாண்டில் கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு
09:32 March 21
நவீன வசதிகளுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்!
விவசாயிகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்
09:13 March 21
கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!
சட்டப்பேரவையில் இன்னும் சற்று நேரத்தில் வேளாண் பட்ஜெட் (2023 -2024) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.