தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதுகலை ஆசிரியர் பணிக்கு நாளை நேரடி கலந்தாய்வு - நேரடி நியமனக் கலந்தாய்வு

பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுச் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நாளை (அக்.14) நேரடி நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

முதுகலை ஆசிரியர் பணிக்கு நாளை நேரடி கலந்தாய்வு
முதுகலை ஆசிரியர் பணிக்கு நாளை நேரடி கலந்தாய்வு

By

Published : Oct 13, 2022, 7:40 PM IST

சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுச் செய்யப்பட்டுள்ள அரசியல் அறிவியில், வரலாறு, புவியியல், மனையியல், கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தாவரவியல், விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கு நாளை நேரடி நியமனக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21 முதல் 2022-23ஆம் ஆண்டு முடிய உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2849 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் அரசியல் அறிவியில், வரலாறு, புவியியல், மனையியல், கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோருக்கு எழும்பூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தாவரவியல், விலங்கியல் முதுகலை ஆசிரியர்களுக்கு நேரடி நியமனக் கலந்தாய்வு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்திலும் நடைபெறுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியிலில் உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் அனைத்துக் கல்வி சான்றிதழ் நகலுடன் காலை 9 மணிக்கு வர வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாங்களும் கிருஷ்ணன் தான்..நெய் டப்பாவை திருடிய இளைஞர்

ABOUT THE AUTHOR

...view details