தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது எப்படி? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - trichy sri ranganathar temple festivals

சென்னை:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வரும் ஜூலை மாதம் வரையில் நடத்த வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்தப்பட உள்ளன என்பது குறித்து, மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம்

By

Published : Jan 6, 2021, 3:36 PM IST

கரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை எனவும், ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் என மனுதாரர் ரங்கராஜன் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மத உரிமை, பொது நலனை விட வாழ்வுரிமை உயர்ந்தது எனவும், வாழ்வுரிமை முக்கியமானது எனவும் வாழ்வுரிமையை கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என தெரிவித்தார்.

அதேசமயம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பொது சுகாதாரம், கரோனா தடுப்பு விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:கோயில்கள் மீது தொடர் தாக்குதல் - விழிப்புடன் இருக்க அலுவலர்களுக்கு ஆந்திர முதலமைச்சர் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details