தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கிராமங்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை! - தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: தென்காசி மாவட்டத்தின் கீழ் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

tamil-nadu

By

Published : Nov 13, 2019, 12:48 PM IST

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, சேரன் மகாதேவி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், திருநெல்வேலியிலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

இதில், தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி வருவாய் கோட்டத்தின் கீழ், கடையம் (12 கிராமங்கள்), ஆழ்வார்குறிச்சி (13 கிராமங்கள்), கல்லூரணி (11 கிராமங்கள்), தென்காசி (11 கிராமங்கள்) ஆகிய 47 கிராமங்கள் செயல்படும்.

அதேபோல், சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தின் கீழ், சங்கரன்கோவில் (6 கிராமங்கள்), குருக்கள்பட்டி (9 கிராமங்கள்), சேந்தமங்கலம் (5 கிராமங்கள்), கரிவலம்வந்தநல்லூர் (9 கிராமங்கள்) வீரசிகாமணி (6 கிராமங்கள்) என 35 வருவாய் கிராமங்கள் செயல்படும்.

மேலும், வன்னிகோனந்தேல் பிர்கா பகுதி சங்கரன்கோவில் தாலுகாவிலிருந்து பிரிக்கபட்டு நெல்லை மாவட்டத்தில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details