தென் தமிழ்நாடு, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 1 கிலோமீட்டர் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (மே 08) மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
(மே 09): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
(மே 10): மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
(மே 11, 12) : மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஒரு சில வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.