சென்னை: மைலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "புதிய மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டிருக்கிறோம். நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுத்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.
அதிமுகவில் காலியாக உள்ள பதவிகள் அனைத்தும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக நிரப்பப்படும். புதிய பதவிகளுக்கான பட்டியலும் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும்.