தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு! - தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
சென்னை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கட்சி சார்பாகப் போட்டியிடப்படும் வேட்பாளர்கள், தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
![பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு! List of BJP standing constituencies and candidates](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10895893-thumbnail-3x2-bjp.jpg)
List of BJP standing constituencies and candidates
பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள், தொகுதிகள் விவரம்
- ராசிபுரம் - எல். முருகன் (மாநிலத் தலைவர்) மாநில தலைவர் எல்.முருகன்
- காரைக்குடி - ஹெச். ராஜா (மூத்தத் தலைவர்) முன்னாள் மாநிலத் தலைவரும், மூத்த தலைவருமான ஹெச்.ராஜா
- சேப்பாக்கம் - குஷ்பு
- ராஜபாளையம் - நடிகை கவுதமி (மாநில செயற்குழு உறுப்பினர்) மாநில செயற்குழு உறுப்பினர் கவுதமி
- கோவை தெற்கு - வானதி சீனிவாசன் (தேசிய மகளிர் அணித் தலைவர்) தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்
- கிணத்துக்கடவு - அண்ணாமலை (மாநில துணைத் தலைவர்) மாநில துணைத் தலைவர் அண்ணாமலை
- மயிலாப்பூர் - கே.டி. ராகவன் (மாநிலப் பொதுச்செயலாளர்) மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன்
- திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் (மாநில துணைத் தலைவர்) மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன்
- திருத்தணி - சக்கரவர்த்தி (மாநிலத் துணைத் தலைவர்) மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி
- வேளச்சேரி - டால்பின் ஸ்ரீதர் (மாநிலச் செயலாளர்) மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர்
- துறைமுகம் - வினோஜ் பி. செல்வம் (மாநில இளைஞரணித் தலைவர்) மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம்
- திருவாரூர் - கருப்பு முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்) மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம்
- ஆத்தூர் - டாக்டர் பிரேம் (வி.பி. துரைசாமி மகன்)
- திருவண்ணாமலை - தணிகைவேல்
- வேலுர் - கார்த்தியாயினி (மாநிலச் செயலாளர்) மாநில செயலாளர் கார்த்தியாயினி
- ஒசூர் - நரேந்திரன் (மாநில துணைத் தலைவர்)
- தூத்துக்குடி - சிவ முருக ஆதித்தன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்)
- பழனி - கார்வேந்தன்
- சிதம்பரம் - ஏழுமலை
- காஞ்சிபுரம் - கேசவன்
இதையும் படிங்க:பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு : இரு கட்சித் தலைவர்களிடையே உடன்படிக்கை கையெழுத்து!
Last Updated : Mar 6, 2021, 6:08 PM IST