தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் வருகின்ற மே 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - corona virus
சென்னை: கரோனா தொற்று அதிகமாக உள்ளதால் மதுக்கடைகள் வருகின்ற மே 7ஆம் தேதியன்று சென்னையில் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
dsd
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை...
!