கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பொருளாதார சிக்கல்களை சரிகட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மே 7ஆம் தேதி திறந்தது. அதையடுத்து மதுவிற்பனையின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையில், உச்ச நீதிமன்றம் மீண்டும் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.