தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் அறிவிப்பை மீறி கொரட்டூரில் களைகட்டிய மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல் துறை! - கொரட்டூரில் விதிமுறை மீறி மது விற்பனை செய்த மதுபான கடை

சென்னை : சென்னை கொரட்டூரில் அரசின் அறிவிப்பை மீறி, மது விற்பனை செய்த மதுபானக் கடையின் மீது காவல் துறையினர் எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

liquor sale in Korattur violating state notification
அரசின் அறிவிப்பை மீறி கொரட்டூரில் களைகட்டிய மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல்துறை!

By

Published : Feb 9, 2020, 5:56 PM IST

வள்ளலார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் மது விற்கக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர விடுதிகள் ஆகியவை அனைத்திற்கும் சேர்த்தே தமிழ்நாடு அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இதனை மீறி மது விற்பனை செய்வோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வுத்தரவில் கூறப்பட்டது.


இந்நிலையில் சென்னையில் பல்வேறுப் பகுதிகளில் பெயரளவுக்கு மட்டுமே மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அவற்றின் கீழ் செயல்படும் பார்களில் தங்கு தடையின்றி, மது விற்பனை அமோகமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக நேற்று கொரட்டூர் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் காலை 7.30 மணி முதல் மது விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையைவிட அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுபான பொத்தல்களை, நீண்ட வரிசையில் நின்று மதுப் பிரியர்கள் வாங்கி, அருந்தி வந்தனர். ஆர்வமுடன் மதுப்பிரியர்கள் காலை முதல் மது அருந்தி வந்துள்ளனர்.

மறைமுகமாக பல இடங்களில் மது விற்பனை செய்துவந்த நிலையில், கொரட்டூர் காவல் நிலையம் அருகே ரெட்டி சுடுகாடு அருகே உள்ள குறிப்பிட்ட பாரில் அனைவருக்கு தெரியும் படி கடையில் வைத்தே மது விற்பனை நடந்துள்ளது.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அக்கம்பக்கம் வீடுகள் உள்ள நிலையில், விடுமுறை நாளில் மதுவை சாலைகளில் நின்று குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுகின்றனர். அரசின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என எதுவொன்றும் இங்கே பின்பற்றப்படுவதில்லை. மதுபானம் விற்பனை செய்ய நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அரசு நேரம் நிர்ணயித்து உள்ள நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தவிர்த்து, 24 மணி நேரமும் தாராளமாக மது விற்பனை செய்யப்படுவது குறித்து பல புகார்கள் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை காவல் துறை உயர் அலுவலர்களும் கண்டுகொள்ளவதில்லை' என்று குற்றம்சாட்டினர்.

அரசின் அறிவிப்பை மீறி கொரட்டூரில் களைகட்டிய மது விற்பனை - கண்டுகொள்ளாத காவல் துறை!


இதையும் படிங்க : குன்னூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா

ABOUT THE AUTHOR

...view details