சென்னை: 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில், மதுபாட்டிலின் விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விலை உயர்வு... - தமிழ்நாட்டில் 7 ஆம் தேதி திறக்கப்படும் மதுபானக்கடை
09:33 May 06
தமிழ்நாட்டில் டாஸ்மாக் விலை உயர்வு...
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் கடந்த 40 நாட்களாக மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்போது, மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசு சில பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதியளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வருகின்ற 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. சென்னையில் மட்டும டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழ்நாடு 15 விழுக்காடு உயர்த்தியுள்ள காரணத்தினால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் 7ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா அறிகுறி? - தேனி வீட்டில் தனிமைப்படுத்தல்