தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபான பார் ஊழியர் சந்தேக மரணம் - காவல்துறை விசாரணை! - பார் ஊழியர் மரணம்

சென்னை: தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே பார் ஊழியர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Liquor bar employee suspected death - Police investigation
Liquor bar employee suspected death - Police investigation

By

Published : Jun 17, 2020, 9:21 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் ரயில்வே தண்டவாளம் அருகில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஓட்டேரி காவல் துறையினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், அந்நபர் அப்பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றின் பாரில் வேலை பார்த்துவந்த ராமு (40) என்பதும், கரோனா ஊரடங்கு காரணமாக மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளதால், மதுபானங்களை வாங்கி அந்தப் பகுதியில் சிலருக்கு அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது ரயில் மோதி உயிரிழந்தாரா என்ற கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:முன்னாள் மேயர் வீட்டில் பணிபுரிந்த காவலாளி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details