தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு, வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை
rain

By

Published : Jul 30, 2021, 1:23 PM IST

சென்னை:தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 30) கோயம்புத்தூர், நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜூலை 31: கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட்1 முதல் ஆகஸ்ட் 3 வரை:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

சென்னை வானிலை நிலவரம்

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

வங்க கடல் பகுதிகள்

ஜூலை 30: தென் மேற்கு வங்க கடல், தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜூலை 30 முதல் 31 வரை: வட மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்கள்

அரபிக்கடல் பகுதிகள்

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை:கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஜூலை30 முதல் ஆகஸ்ட் 3 வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: விசைப் படகு மோதி உயிரிழந்த அரிய வகை மீன்

ABOUT THE AUTHOR

...view details