சென்னை:Rain:டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்;
Rain: டெல்டா, தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை - Light rain in south coast districts
Rain: டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
'12.01.2022: தென்தமிழ்நாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
13.01.2022: உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
14.01.2022, 15.01.2022: கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும்; குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
11.01.2022:தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சியின் காரணமாக இடி, மழையுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - செந்தில்பாலாஜி