சென்னை: எம்.கே.பி.நகரைச் சேர்ந்த சார்லஸ் ராஜ்குமார் என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவருக்கும் 2019 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 17 பவுன் தங்க நகை உள்ளிட்ட சீர்வரிசைகள் வழங்கிய போதும், கூடுதல் பணம், வீடு கேட்டு ராஜ்குமார், ரமணியை சித்ரவதை செய்து வந்துள்ளார். அத்துடன், ரமணியின் நடத்தையிலும் சந்தேகம் கொண்டுள்ளார்.
இதனால், தாய் வீட்டில் வசித்து வந்த ரமணியை, 2020ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி எம்.கே.பி. நகர் வீட்டுக்கு நேற்று அழைத்துச் சென்ற ராஜ்குமார், அங்கு அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினார். இதுசம்பந்தமாக ரமணியின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.