நூலக வார விழா இம்மாதம் 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு செங்குன்றம் வாசகர் வட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்த தீர்மானித்துள்ளது.
நூலக வாரவிழா: மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி! - கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி
சென்னை: நூலக வாரவிழாவை முன்னிட்டு செங்குன்றம் முழுநேர நூலகத்தில் நடைபெற்ற கவிதை, கட்டுரைப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்த வாசகர் வட்டம் சார்பாகத் திட்டமிட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமின்றிக் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நல்ல புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன்படி இன்று புத்தக வாசிப்பில் ஆர்வம் உள்ள மாணவ - மாணவிகள் நூலகத்தில் வைத்துள்ள புத்தக கண்காட்சியில் பங்கேற்று சமூகம், அரசியல், கல்வி, கணிதம், இலக்கியம், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை படித்து பயன்பெற்றனர்.
இதையும் படிங்க: அண்ணிக்கு இன்ப அதிர்ச்சியாக பரிசளித்த தனுஷ்!