சென்னைமயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21ஆம் தேதி 'காவலர் நினைவு நாள்' அனுசரிக்கப்படுகிறது. காவலர் நினைவு நாளையொட்டி காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு சார்பில், அனைத்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யான ஜாஃபர் சேட்-க்கும் இந்த அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி ஜாஃபர் சேட் தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு-வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "அனைத்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி-க்களையும் காவலர் நினைவு நாள் அணிவகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றி.
காவலர் நினைவு நாள் அணிவகுப்பிற்கு அனைத்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி-க்களுக்கும் அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக ஒரு ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யை தேர்ந்தெடுத்து, அவர்களை மற்ற அனைவர் சார்பிலும் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கலாம்.
அப்படி இல்லாதபட்சத்தில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி-க்களை அவரவர் வசதிக்கேற்ப, மாவட்ட காவல் தலைமையிடங்களில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சிறப்பிக்க அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கலாம்" என அவர் குறிப்பிட்டுக் கடிதத்தை டி.ஜி.பி சைலேந்திர பாபுவிற்கு அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ‘கொலை சம்பவங்களை தடுக்கவே ஆலோசனை கூட்டம்’ - டிஜிபி சைலேந்திரபாபு