தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசேரியன் தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்குக் கடிதம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சிசேரியனுக்கு முழுமையான காரணம் பெற்றோர், தங்களுக்குத் தேவையான தேதிகளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான், சிசேரியனை தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்குக் கடிதம் எழுத உள்ளோம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சு
அமைச்சர் மா.சு

By

Published : Nov 16, 2021, 5:37 PM IST

சென்னை: பருவ மழை பேரிடர் காலத்தில் தாய் சேய் நலச் சிறப்புப் பணியைப் பாராட்டி மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று சான்றிதழ் வழங்கினர்.

சான்றிதழ் வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் எழும்பூர் தாய்சேய் மருத்துவமனையில் பாதுகாப்பாக பிறந்துள்ளன.

இதில் 60 சதவீதம் சுகப்பிரசவம் ஆகவும் 40 சதவீதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்தது. இதில் 8 மருத்துவர்கள் 22 செவிலியர்கள் பணியாற்றி உள்ளனர். இவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அரசு Vs தனியார் மருத்துவமனை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 65 விழுக்காடு பிரசவம் நடைபெறுகிறது. 35 விழுக்காடு பேர் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

இந்த எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளில் 65 விழுக்காடு பேருக்குச் சுகப்பிரசவமாகவும், தனியார் மருத்துவமனையில் 37 விழுக்காடு பேருக்கு மட்டுமே சுகப்பிரசவம் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேற்கிந்திய நாடுகளில் சுகப்பிரசவம்

மேற்கிந்திய நாடுகளில் 20 விழுக்காடு மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது 80 விழுக்காடு சுகப்பிரசவம் ஆக உள்ளது. முன்பெல்லாம் 100 விழுக்காடு சுகப்பிரசவம் மட்டுமே இருந்தது. தற்போது அந்த சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. சிசேரியன் சதவீதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

அமைச்சர் மா.சு

பெற்றோர் தான் காரணம்

இதற்குக் முழுமையான காரணம் பெற்றோர், தங்களுக்குத் தேவையான தேதிகளில் குழந்தையை வெளியில் எடுப்பது தான் காரணம். இதை ஊக்கப் படுத்த கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளோம்.

சிசேரியன் தவிர்க்குமாறு

சிசேரியன் தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைக்குக் கடிதம் எழுத உள்ளோம். ஆறு இடங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான அவசரக்கால சிகிச்சைப் பிரிவு கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு இருக்காது

மேலும், பன்றிக் காய்ச்சல் தொடர்பாக 13 நபர்களைப் பரிசோதனை செய்ததில் இரண்டு நபர்களுக்கு உறுதியாகி உள்ளது. அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

அது மட்டுமில்லாமல் கேரளா, தமிழ்நாடு எல்லையில் தொடர்ந்து அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இதனால், தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு இருக்காது. தற்போது வரை 463 தற்போது டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தை இதுவரை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை.

ஆளுநர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறது.

அண்ணாமலை திண்டாட்டம் இல்லாமல் செலுத்தட்டும்
மேலும், “1.05 கோடி தடுப்பூசி பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கொடுக்கிறோம் அவர் திண்டாட்டம் இல்லாமல் செலுத்தட்டும்" எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அலுவலகத்தில் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் டாகா மசாயுகி மரியாதை நிமித்தமாகத் தமிழ்நாடு மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட கட்டடத்தை வெள்ளிக்கிழமை (நவ.19) பார்வையிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க:நீட் தேர்வு: தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details