தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட மாவட்டங்களில் புதிதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

thaluk hospital as district head quarters hospital  letter to change thaluk hospital as district head quarters hospital  district head quarters hospital  thaluk hospital  hospital  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை  தலைமை மருத்துவமனை  மருத்துவமனை
மருத்துவமனைகளை தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை

By

Published : Oct 26, 2021, 1:15 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட மாவட்டங்களில், புதிதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன், மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு பதிலாக புதிய அரசு தலைமை மருத்துவமனையில் உருவாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கரூர், நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும். அதற்கான திட்டங்களைத் தயாரித்து அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details