தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புகை இல்லா போகி, பொங்கலை கொண்டாடுவோம்': விழிப்புணர்வு பரப்புரை வாகனம் துவக்கம்! - புகை இல்லா போகி

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி, பொங்கலை கொண்டாடுவோம் என்ற விழிப்புணர்வு பரப்புரை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.

lets-celebrate-pongal-without-smoke-awareness-campaign-vehicle-launched
lets-celebrate-pongal-without-smoke-awareness-campaign-vehicle-launched

By

Published : Jan 12, 2021, 5:26 PM IST

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எல்.இ.டி விழிப்புணர்வு வாகனங்களை மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடாசலம் , “இறைவன் அளித்துள்ள இயற்கை வரங்களில் காற்றும், நீரும் முக்கியமான ஒன்று. எனவே நீரையும், காற்றையும் பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமையாக உள்ளதால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்களில் காற்று, நீர் மாசடைவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக போகி பண்டிகையின்போது தேவையற்ற பொருட்களை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை போகிப் பண்டிகையின் போது எரிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் போகி பண்டிகை அன்று தேவையற்றப் பொருட்களை எரிக்காமல் கண்காணிக்க சென்னையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்பதால் அபராதம் ஏதும் விதிக்காமல் விழிப்புணர்வு வாயிலாக காற்று மாசு ஏற்படுத்துவதை தடுத்து வருகிறோம். கரோனா காலங்களில் வாகன போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இறந்துபோன பெண்ணின் பெயரை பயன்படுத்தி பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 2500 பணம் மோசடி

ABOUT THE AUTHOR

...view details