தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஓணம் திருநாள் இந்தியாவின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்” ஆளுநர் ரவி - ஓணம் திருநாள் அம்ருத காலத்தில்

ஓணம் திருநாள் அமிர்த காலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவுசெய்வதாக அமையட்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

”ஓணம் திருநாள் இந்தியாவின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்” ஆளுநர் ரவி
”ஓணம் திருநாள் இந்தியாவின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்” ஆளுநர் ரவி

By

Published : Sep 8, 2022, 7:39 AM IST

சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஓணம் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ”தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நன்னாள் வாழ்த்துகள். அழகிய இத்திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும்.

மக்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு வருகைதரும் மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவதையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துக்கள் இந்த அமிர்த காலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவுசெய்வதாக அமையட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஓணம் பண்டிகை சிறப்பு பூ சந்தை - 600 டன்களுக்கு மேல் பூ விற்பனை

ABOUT THE AUTHOR

...view details