தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று தொடங்குகிறது லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் சீசன் 2.. புதிதாக களமிறங்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி! - chennai news

Legends League Cricket 2023: 22 நாட்கள் நடைபெறும் 'லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் இரண்டாவது சீசனில், ஆரோன் ஃபின்ச் தலைமையில், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணி புதிதாக களமிறங்குகிறது.

புதியதாக களமிறங்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் 2023

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 7:07 AM IST

சென்னை: இன்று (நவ.18) ராஞ்சியில் தொடங்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் இரண்டாவது சீசனில், ஆரோன் ஃபின்ச் தலைமையில், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணி புதியதாக களமிறங்குகிறது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில், இந்தியா கேப்பிடல்ஸ் அணி, பில்வார கிங்ஸ் அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், இதன் இரண்டாவது சீசன் இன்று (நவ.18) தொடங்கி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரானது ராஞ்சி, டேராடூன், ஜம்மு, விசாகப்பட்டினம் மற்றும் சூரத் ஆகிய ஐந்து நகரங்களில் நடைபெறும்.

இது குறித்து லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “22 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில், மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படுகிறது. ராஞ்சியில் தொடங்கப்படும் இந்த சீசன், நவம்பர் 24ஆம் தேதி டேராடூனிலும், நவம்பர் 27 முதல் டிசம்பர் வரை நான்கு போட்டிகள் ஜம்முவிலும், டிசம்பர் 2 முதல் 4 வரை மூன்று போட்டிகள் விசாகப்பட்டினத்திலும் நடத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அரையிறுதிப் போட்டியானது சூரத்தில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மேலும், இந்த தொடரின் இறுதிப் போட்டியானது, அரையிறுதி முடிவடைந்து 2 நாட்கள் இடைவெளிக்குப் பின் டிசம்பர் 9ஆம் தேதி நடத்தப்படவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ள, சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற புதிய அணியின் அறிமுக விழாவானது நவம்பர் 11 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் க்வில் பெவன், ஜெஸ்ஸி டேனியல் ரைடர், ராஸ் டெய்லர், அசோக் டிண்டா, மன்விந்தர் பிஸ்லா (முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்) ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், காசி விஸ்வநாதன் (சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி), ஸ்ரீநாத் சித்தூரி (சி.இ.ஓ சதர்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்), கௌதம் ரெட்டி (மேலாண்மை இயக்குனர் சதர்ன் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்) ஆகியோர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியில், பயிற்சியாளாராக மைக்கல் பீவன், அணியின் கேப்டனாக ஆரோன் ஃபின்ச் மற்றும் ராஸ் டையிலர், அசோக் திண்டா, மன்விந்தர் பிஸ்லா, உப்புள் தராங்கா, ஸ்ரீவாட்ஸ் கோசுவாமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க:மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஓய்ந்த தேர்தல்.. வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details