சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 51 அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றி வரும் 1,300 தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்ய வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
விரிவுரையாளர்கள் போராட்டம்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவித்தது போல் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் முழுநேர தற்காலிக (தொகுப்பூதியம்) விரிவுரையாளர்களும் சிறப்புத் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.