தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னை - புதுவை இடையே இரவு 1.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கி அதிகாலை 4 மணியளவில் முழுவதுமாகக் கரையைக் கடந்தது.
இதன் காரணமாக இன்று (நவம்பர் 19) மதியம் வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி - கல்லூரிகளுக்கு (Holiday For School and College) இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், செங்கல்பட்டு, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்