தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு - இரங்கல் தெரிவித்த தலைவர்கள்! - பேராசிரியர் க.அன்பழகன் மறைவு

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கள் தெரிவித்த தலைவர்கள்
இரங்கள் தெரிவித்த தலைவர்கள்

By

Published : Mar 7, 2020, 2:18 PM IST

மறைந்த திராவிட பேரியக்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கட்சித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி:

“பேராசிரியர் மறைவு செய்தி கேட்டு பெருந்துயரும் அடைந்தேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும், உங்களுடைய அனைவரின் சார்பாகவும் இதயம் கனிந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியர் கற்றறிந்த ஞானி. பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் இழப்பு 10 கோடி தமிழ் உள்ளங்களின் இழப்பாகும்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பீட்டர் அல்போன்ஸ்:

“தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கு, சமூக நீதிக்கும், மதசார்பற்ற அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது. அவருடைய பங்கை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன்:

"பேராசிரியர் க. அன்பழகன் தனது 97ஆவது வயதில் உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அவர் நன்கு படித்தவர், நாகரீகமானவர், குறிப்பாக சிறந்த அரசியல்வாதி. அவரின் மறைவிற்கு, அவரது குடும்பத்திற்கும், கட்சியினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்தார்.


காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார் :

“தமிழ்நாடு அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்தவர் நம்முடன் இல்லை. அவர் வகுத்த பாதையில் திமுக சென்றுகொண்டிருக்கிறது. நம்முடன் இல்லை என்றாலும் விண்ணில் இருந்து ஆசிர்வதிபார்” எனத் தெரிவித்தார்.

வணிகர் சங்க பேரவை விக்கிரமராஜா:

“வணிகர்களுக்கு உற்ற தோழனாக எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியவர் என்றால் அது பேராசிரியர் க. அன்பழகனாரையே சேரும். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அவரின் அரசியல் சாதனைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்' - திருநாவுக்கரசர்

ABOUT THE AUTHOR

...view details