தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் காங்கிரஸ்' - குஷ்பு - Kushbhu

சென்னை: நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் போன்றது காங்கிரஸ் கட்சி என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

rajiv gandhi 75th birthday

By

Published : Aug 21, 2019, 2:32 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75ஆவது பிறந்த நாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, மூத்தத் தலைவர் குமரி ஆனந்தன், செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி. ஜெயகுமார், ஹெச். வசந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்புரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைத் தேர்வு செய்யும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் கூறினார். ராஜிவ் காந்தியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவர் இந்த நாட்டிற்காக செய்த தியாகத்தை மக்களிடம் எடுத்து கூறுவோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். அழகிரி, ‘இந்தியாவில் நம்முடைய இரண்டு பெரிய எதிரிகள் பாஜக மற்றும் அதிமுக தான். ப. சிதம்பரம் தொடர்ந்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதன் விளைவாகவே அவரது வீட்டில் தற்போது சிபிஐ சோதனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் உள்ள சர்வாதிகாரிகளையும், சென்னையில் உள்ள அடிமை கூட்டத்தையும் தகர்த்து எறிய வேண்டும் என்றால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என கூறினார்.

ராஜிவ் காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் பங்கேற்பு

தொடர்ந்து பேசிய குஷ்பு, வெற்றி-தோல்வி அரசியலில் சகஜம் என்றும், இந்த தோல்வியால் மிகப்பெரிய வெற்றி நமக்கு காத்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும், நாட்டிற்கு நிழல் தரும் ஆலமரம் போன்றது காங்கிரஸ் கட்சி என்று கூறிய அவர், ராஜிவ் காந்தியின் பிறந்த நாளான இன்று முதல் ஒன்றுபட்டு செயல்படுவோம் எனவும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details