திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் வாழ்த்து
ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டர் பதிவு திருமாவளவன் வாழ்த்து
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
கலைஞர் கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
கமல் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் ட்விட்டர் பதிவு உதயநிதி வாழ்த்து
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ஸ்டாலினின் புகைப்படத்தை பகிர்ந்து #HBDதலைவரே என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு