சென்னை:பூவிருந்தவல்லியில் கர்ப்பிணி பெண் வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் காவல் நிலைய வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கர்ப்பிணி பெண்ணை சமாதானம் செய்ய காவல் ஆய்வாளர் என காவல் நிலையத்திலிருந்து யாரும் முன் வரவில்லை.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சவிதா. இவர் நேற்று சக வழக்கறிஞர்களுடன், வழக்கு தொடர்பாக சென்னிர்குப்பத்தில் உள்ள அர்ச்சனா என்பவரது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு திடீரென்று வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த 8-க்கும் மேற்பட்டோர் ஆண்கள் வழக்கறிஞர் சவிதாவை கர்ப்பிணி என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். சவிதா உட்பட அவருடன் சென்ற சக வழக்கறிஞர்களையும் அங்கிருந்த 8 பேர் தாக்கியதாக சவிதா குற்றம் சாட்டுகிறார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சவிதா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற பின், பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகார் மீது காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சவிதா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அதேபோல், புகாருக்கான சிஎஸ்ஆரும் காவல்துறையினர் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரத்தில் பூவிருந்தவல்லி காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சவிதா கூறுகையில், “கர்ப்பிணி என்றும் பாராமல் 8 பேர் என்னையும் என் கூடே இருந்தவர்களையும் கதவை தாழ்ப்பாலிட்டு கடுமையாக தாக்கினார்கள். மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் என்னை அடித்து சித்திரவதைப் படுத்தினார்கள். அந்த 8 பேரின் பெயர்க்கூட எனக்கு தெரியாது; சிகிச்சைக்கு பிறகு புகார் கொடுக்க வந்தேன்.