சென்னை:பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அண்மையில் எழுதினார். அக்கடிதத்தில், தொடர்ந்து குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இருந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரியிருந்தார். அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் அதிகபேரால் பகிரப்பட்டது.
இந்நிலையில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் சுப்பிரமணியன் சுவாமி மீது அடையாறு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் இணைய வழியில் புகார் அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகத்தினரை திசை திருப்பும் வகையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துகள் உள்ளதாகவும், இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கடிதம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.