சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த ராகேஷ்(33) உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் மறைமலைநகரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு புரசைவாக்கத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார்.
அப்போது, தாம்பரம் மதுரவாயல் பைபாஸில் அதிவேகமாக பைக்கில் வந்துகொண்டிருந்த ராகேஷ் , சாலையில் நின்று கொண்டிருந்த கருங்கல் ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறத்தில் மோதி விபத்தில் சிக்கி ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.