சென்னை: சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (34). சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரோடு ஒன்றாக படித்து தற்போது வழக்கறிஞராக உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
அப்பெண்ணிடம் நெருங்கிப் பழகி பலமுறை ஒன்றாக தனிமையில் இருந்துள்ளார். திடீரென முரளி சரிவர பேசாமல், விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட பெண் எனக் கூறி இழிவு படுத்தி திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென நாளை வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த தகவலை அறிந்த பெண், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.