சென்னை: கோடம்பாக்கம் பாலம் அருகே நேற்றிரவு (ஜன.22) அதிவேகமாக வந்த பைக் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கிருந்த வங்கி வளாகத்தில் புகுந்த பைக், ஜெனரேட்டரில் வேகமாக மோதியது. இந்த வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.